அழைத்தது நான் அல்லவா
மகனே மகளே நீ திகையாதே
பகலும் இரவும் காப்பது நானே
என் உறவே பதறாதே
நான் உனக்காக வருகின்றேன்
உன் உறவாய் நானிருப்பேன்
வழி முழுதும் காத்திருப்பேன்
உன் நிழலாய் நான் வருவேன் சுமை முழுதும் நான் சுமப்பேன்
இது கருவில் உருவான உறவல்லவா
தாயுமானவன் நானல்லவா
என் சிறகில் வாழ்வது நீயல்லவா
என் தோள்கள் இருப்பது உனக்கல்லவா
உன்னை நான் வரைந்தேன் உயிராய் சுமப்பேன்
விண்ணும் மண்ணும் மாறிடலாம்
சொந்தமும் பந்தமும் விலகிட லாம்
பாசமும் நேசமும் பிரிந்திட லாம் பெற்றதாயும் உன்னை மறந்திடலாம்
விழுந்தாலும் எழுந்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை வெறுத்தாலும் காத்திடுவேன்
மாறாது மறையாது என் சொல் அல்லவா
ஒருநாளும் குறையாதென் அன்பல்லவா
உனை நான் மறவேன் உயிராய் சுமப்பேன்
0 Comments