நானே உன் கடவுள்..

முதலும் முடிவுமாய்

நானே இருக்கிறேன்.

என் மக்களின் துன்பங்கள் கண்டேன்.

அவர் மனம்படும் வேதனை உணர்ந்தேன்.

அவர் அழுகுரல் நான் கேட்டேன்

நாடும் நலமும் வாழ்வும் வளமும்

வழங்கிட மனமுவந்தேன்

யாரை நான் அனுப்புவேன் - 2



எனை அனுப்பும்

எனை அனுப்பும் -2

இதோ நான் இருக்கிறேன்


1) உலகம் அறியா எளியவன்

வாழ்மொழி பேசா சிறியவன்

உன் துணை இருந்தால்

என்னுடன் நடந்தால்

துணிவுடன் நான் செல்வேன்

எனை அனுப்பும்

எனை அனுப்பும்

இதோ நான் இருக்கிறேன்


நானே உன் கடவுள்

வான் படைகளின் இறைவனாய்

நானே இருக்கிறேன்


2) என் பெயரால் செல்பவர் யாரோ

என் செய்தியை சொல்பவர் எவரோ

என் பணியினை செய்வாரே

அன்பும் அறமும் நீதியும் நேர்மையும்

நிலை நிறுத்திடுவாரோ

யாரை நான் அனுப்புவேன்