About Me

header ads

நீயே நிரந்தரம் பாடல் வரிகள். Neeye nirantharam christian song lyrics.

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறாஉன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்- 2
நான் மாண்ட பின்பும்
உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்..
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் -2
                                   --- அம்மையப்பன்...

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எனக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனைநீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்..
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம்- 2
                              ---  அம்மையப்பன்...

Post a Comment

0 Comments