About Me

header ads

என்ன என் ஆனந்தம் கிறிஸ்தவ பாடல் வரிகள்... Enna en aanantham song lyrics

என்ன என் ஆனந்தம்
என்ன என் ஆனந்தம்
சொல்லக் கூடாதே...

மன்னன் கிறிஸ்து என்
பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே...

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் 
நன்றாய் மகிழ்கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை போற்றிடுவோம்

2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள்
எல்லாம் பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே..

3. அட்சயன்பட்சமாய் இரட்சிப்பை
எங்களுக்கருளினதாலே
நிச்சயம் சுவாமியை பற்றியே சான்று
பகர வேண்டியதே...

4. வெண்ணங்கி பொன்முடி
வாத்தியம் மேல்வீட்டில் ஜெயக்கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற நாதனை போற்றிடுவோம்..

Post a Comment

0 Comments