பல பண்தரும் நரம்புண்டு.
என்னையும் ஓர்சிறு நரம்பெனவே
அதில் இணைத்திட வேண்டும் இசையரசே!
1. (யாழினை நீயும் மீட்டுகையில்
இந்த ஏழையின் இதயம் துயில் களையும்). -2
யாழிசை கேட்டு தனைமறந்து -2
உந்தன் ஏழிசையோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன்....
2. (விண்ணக சோலையின் மலரெனவே- திகழ்
எண்ணில்லா தாரகை உனக்குண்டு)- 2
உன்னருட் பேரொளி நடுவினிலே- 2
நான் என்சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்.
ஏற்றிடுவேன்...
0 Comments