About Me

header ads

நெஞ்சம் ஒரு சங்கீதமே இறைவா. பாடல் வரிகள்.

(நெஞ்சம் ஒரு சங்கீதமே இறைவா
நித்தம் அது உனதாகுமே.) -2

நேசம் உன்னில் நான் காண்பதால்
உன்னோடு உறவாட
என்ஜீவன் ஏங்கும்...
                     (நெஞ்சம் ஒரு...)

1. உன்னைக் காணாமலே
உடன் பேசாமலே
நான் தவித்திடுவேன்... ஆ...

எந்தன் நிலைமாறியே
வழி தடுமாறியே
நான் கலங்கிடுவேன்... ஆ...

நீ இல்லாமல் உயிர்வாடுதே..
எந்தன் உணர்வோடு போராடுதே
உயிராக வா.... உறவாக வா...

அழைத்தேன் அழுதேன்
உயிரேநீ வா வா..

2. என் கோவில் தெய்வம்
அது நீயானதால்
உன்னை வணங்கிடுவேன்.. ஆ...

உயிர் ஆதாரமே
என்னில் நீயானதால்
உன்னில் மகிழ்ந்திடுவேன்... ஆ...

நீ இல்லாமல் நானில்லையே..
உன் நினைவின்றி வாழ்வில்லையே..

நிழலாக வா... நீங்காமல் வா...
அழைத்தேன் அழுதேன்
அன்பே நீ வா.. வா..
                             (நெஞ்சம் ஒரு)



Post a Comment

0 Comments