About Me

header ads

ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ-இந்த அவனியோர் மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த

இவ் அற்புத பாலகனார்



1) பாருருவாகு முன்னே -இருந்த

பரம்பொருள் தானிவரோ

சீருடன் புவிவான் அவை

பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ



2) மேசியா இவர் தானோ – நம்மை

மேய்த்திடும் நரர் கோனோ

ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்

ஆதி அன்புள்ள மனசானோ



3) தித்திக்கும் தீங்கனியோ – நமது

தேவனின் கண்மணியோ

மெத்தவே உலகிருள் நீக்கிடும்

அதிசய மேவிய விண்ணொளியோ



4) பட்டத்து துரை மகனோ- நம்மை

பண்புடன் ஆழ்பவனோ

கட்டளை மீறிடும் யாவர்க்கும்

மன்னிப்பு காட்டிடும் தாயகனோ



5) ஜீவனின் அப்பமோ தான் – தாகம்

தீர்த்திடும் பானமோ தான்

ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்

அடைக்கல மானவரிவர் தானோ!

Post a Comment

0 Comments