About Me

header ads

தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா...

(தேவா... எந்தன் நாவிலாடும்
பாடலாக வா....
தேவா... உந்தன் வான்புகழை
பாட வரம் தா...)- 2

உன் அருள் மேன்மையால்
பூமியெங்கும் புன்னகை..
உன்புகழ் பாடவே
பொங்கியெழும் வல்லமை
மனமாற வாழ்த்த எழும்
இறையரசின் வைகறை...
                      (தேவா... எந்தன்)

1. (நான் எந்தன் வேலியாக
   என் நலம் கொண்டேன்..
   நீ.... பூமியெங்கும் வாழும்
  தென்றலாகிறாய்...) -2

   உன் ஒளி காண காண
   உள்ளம் மலர வேண்டுமே..
   உன் வழி போகப்போக
   உறவு பெருக வேண்டுமே..
   இறையே... திருவே...
   வாழ்வு உந்தன் கீதமாகவே...
                              (தேவா.. எந்தன்)

2. (நான்... சிறு கணம் எரியும்
    ஒளித்துகள் ஆனேன்..
    நீ... அதை ஏற்றி வைக்கும்
    ஒளிக்கடலானாய்...) -2

    உன் பணி செய்வதிலே
    எந்தன் ஆசை தீரவே...
    தன் தலை தியாகமேற்கும்
    தீப வாழ்வை போலவே...
    இறையே... திருவே....
    வாழ்வு உந்தன் கீதமாகவே....

                             (தேவா.... எந்தன்)

Post a Comment

0 Comments