About Me

header ads

கடல் கடந்து சென்றாலும்.. பாடல் வரிகள்.

கடல் கடந்து சென்றாலும்...
தீ நடுவே நடந்தாலும்...
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ
கடந்திட நேர்ந்தாலும்...
உன்னோடு நானிருப்பேன்...2
அஞ்சாதே கலங்காதே - 2

1. ( தேவனின் பார்வையில்
நீ மதிப்புள்ளவன்
பொன் விளை நிலம் போலே...

பூமியில் வாழ்ந்திடும்
யாவிலும் உன் நிலை
உயர்ந்தது அவராலே...) - 2

பால் நினைந்தூட்டிடும் 
தாய்மறந்தாலும்
நீ அவர் மடிமேலே...

மனம் தேற்றுவார்
பலம் ஊட்டுவார்
வாழ்வினில் ஒளிதானே...
அஞ்சாதே கலங்காதே...-2


2. (பாலையில் பாதையும்
பால்வெளி ஒடையும்
தோன்றிடும் அவர் கையால்...

வான்படை ஆண்டவர் 
வாய்மொழியால் வரும் 
மேன்மையை எவர் சொல்வார்...) -2

பார்வை இழந்தவர் 
வாய்திறவாதோர்
யாவரும் நலமடைவார்...

இறையாட்சியில்
அவர் மாட்சியில்
மானிடம் ஒன்றாகும்...
அஞ்சாதே கலங்காதே...-2

Post a Comment

0 Comments